Saturday, January 22, 2022

கல்யாண பச்சடி (Fruit pachadi)

                                                    கல்யாண பச்சடி


தேவையான பொருட்கள்

பீட்ரூட் -1

தக்காளி-2

சர்க்கரை-1/3 கப்

வாழைப்பழம்-1, ஆப்பிள்-1/2, மாதுளை-1, (மற்றும் உங்களுக்கு தேவையான/பிடித்தமான பழங்களை போடலாம்)

செய்முறை

பீட்ரூடை தோல் சீவி துருவிக் கொள்ளவும் .

தக்காளி - மேல் தோல் நீக்கி அரைத்து வைத்து கொள்ளவும்.

(தக்காளியை இரண்டு நிமிடம் வெந்நீரில் கொதிக்கவிடவும், இதனால் அதன் மேல் தோலை எளிதாக நீக்க முடியும். )

வாணலியில் நெய் விட்டு துருவிய பீட்ரூடை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.  பின்னர் அரைத்த தக்காளி விழுதையும் போட்டு நன்றாக வதக்கவும்.  பீட்ரூட் வெந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை  கரைந்து பீட்ரூட் கலவை நன்றாக ஜாம் போன்ற பதத்தில் வந்தவுடன் அடுப்பை அனைத்துவிடவும் .  நன்றாக ஆர விடவும்.

  இந்த கலவை நன்றாக ஆறியவுடன் இதில் தங்களுக்கு பிடித்தமான பழங்களை சேர்க்கலாம். நான் இதில் மாதுளை,ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் சேர்த்துள்ளேன். 


செய்முறை 2 ( Pressure cooker முறை)

குக்கரில் 2 தேக்கரண்டி நெய் விட்டு துருவிய பீட்ரூடை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.  பின்னர் அரைத்த தக்காளி விழுதையும் போட்டு 2 நிமிடம்நன்றாக வதக்கவும்.. பின்னர் சர்க்கரை சேர்த்து  குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு அனைத்து விடவும். ப்ரஷர்ரை எடுத்து விடவும். 

          இந்த கலவை நன்றாக ஆறியவுடன் இதில் தங்களுக்கு பிடித்தமான பழங்களை சேர்க்கலாம்.

சுவையான இனிப்பு பச்சடி ரெடி!!